
அயனிப்பழத்தை பெட்டியில் கொண்டு போய் வித்தோம்னா, பழம் பாழ்பட்டு விடும் என்று கருதி,
கேசவபுரம் கிட்டன் என்ற கோபாலகிருஷ்ணன் கம்பின் இரு புறமும் பழங்களைக் கட்டித்தொங்க விட்டு "காவடி ஏந்தி" வருவதுபோல் அயனிப்பழங்களை ஏந்தி வந்து விற்பனை செய்யும் அழகைப்பாருங்க மக்கா!
காலையில் வீட்டிலிருந்து கிளம்பி எங்க திருவட்டாறு காங்கரை ஜங்ஷன்ல ஒரு சுத்து சுத்திட்டு வர்றதுக்குள்ள அவர் வைச்சிருந்த அயனிப்பழம் எல்லாம் வித்து தீர்ந்திடுச்சு.
குறிப்பு : கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை சீசனில் பரவலாக கிடைக்கும் மினியேச்சர் பலாப்பழம் போன்ற இந்த அயனிப்பழத்தின் சுளை இனிப்பும் புளிப்பும் கலந்திருக்கும்.
நாவல் பழம் சாப்பிடுவதுபோல் இந்த பழத்தின் சுளையை சுவைக்கலாம். இப்போது இங்கே 15 முதல் 20, 25 ரூபாய் விலைகளில் விற்கிறார்கள்.
மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அருகில் இந்த பழம் அதிகமாக விற்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சீசனில் அயனிப்பழம் கிடைக்கும்.


Posted by