வாழ்க்கையில் நிம்மதி இல்லை என புலம்பும் மனிதர்களே...


இரவு 12 மணி இருக்கும் கிட்டத்தட்ட அனைவரும் வீடுகளில் நிம்மதியாக தூங்கும் நேரம் வடசேரி பேருந்து நிலையம் வரை சென்றிருந்தேன் அங்கு நான் கண்ட காட்சிகள் சற்று என்னை நிலை குலைய செய்தது. வயிறு நிறைய லஞ்சப்பணத்தில் உண்டு AC அறையில் படுத்தும் தூக்கம் வரவில்லை என புலம்பும் ஊழல் பெருச்சாளிகள் வாழும் தூய்மை இந்தியாவில் தான் இந்த பேருந்து நிலையங்களில் அரை வயிற்று உணவேடு நிம்மதியாக தாங்கிக்கொண்டு இருக்கின்றனர்,

நம் தாய், தந்தை வயது ஒத்த மனித உயிர்கள் ! அப்படி என்ன இதெல்லாம் நடப்பது தானே என எளிதாக சொல்லிவிடும் சிலருக்கு ! 

1.இவர்களும் ஒரு காலத்தில் சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ்தவர்களாகதான் இருக்கும் ! 

2.இந்த குளிரிலும் பனியிலும் இவர்கள் அனாதையாக படுத்து தூங்க காரணம் என்ன ? 

3.இங்கு துயிலும் பலரின் #உறவுகள் நிச்சயமாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் அவர்கள் ஏன் இவர்களை கண்டு கொள்ளவில்லை ? 

4.தமிழக அரசின் வீட்டு வசதிவாரியம் இவர்களுக்கு அப்பார்பட்டதா ? 

5.இதில் பலர் முதியவர்கள் அவர்களின் எத்தனை பேருக்குஅரசின் முதியோர் ஓய்வு தொகை போய் சேருகிறது ? 

இந்த காட்சிகளை கண்டு எளிதில் கடந்து போக முடியவில்லை இரவில் வந்து படுத்தேன் தூக்கமும் வரவில்லை காலை 6 மணிக்கு மீண்டும் பேருந்து நிலையம் வரை சென்றேன் அவர்கள் எங்கே என பார்க்கலாம் என்று ? அவர்களின் படுக்கை அறைகள் காலியாகதான் இருந்தன ! 


*மூன்று வேளை உணவு .

*சொந்தவீடோ வாடகைவீடோ நமக்கென்று ஒரு வீடு .

*சிறிய வருமானம் .

*நம்மை சுற்றி உறவுகள் .

இத்தனை இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என புலம்பும் மனிதர்களே ஒருநாள், இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் போராட்டத்தை நேரில் சென்று பாருங்கள் உங்களுக்கு எத்தனை அழகான வாழ்க்கை கிடைத்துள்ளது என்பதை உணர்ந்து கொள்வீர்கள் !

Kanyakumarians Posted by Kanyakumarians


views: 4665
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs