For Advertising... Please Contact - 9940542560

அக்காளே சந்தைக்கு மீனு வேண்ட போவியளா.....?

   2  |   

அக்காளே சந்தைக்கு மீனு வேண்ட போவியளா.....?

Picture Courtesy: Elstin Raj

ஆமாடியே பத்து மணி வண்டில போறண்டியே சணியாச்சயும் மீனு வேண்டைல இன்னுக்கும்
வேண்டலைனா கிழவி கிடக்க விடாதுடீ.......

எனக்கு ஒரு இருவது ரூவாய்க்கு துண்டு மீனும் ஓரு பத்து ரூவாய்க்கு சாளையோ நெத்தொலியோ வேண்டிட்டு வருவியளா.......?

குட்டியே வீட்ல சும்மாதான இருக்கிய உனக்கு கூட வந்து வேண்டினா என்ன மாப்ள சவுதில கிடந்து உண்டாக்கிய பைசாயா கொஞ்சம் செலவாக்குடியே சேத்து வச்சி அவுச்சா தின்ன போறிய.........

இல்ல அக்காளே இன்னைக்கு போஸ்ட்மேன் வருவாய்ன். இந்த மனியெ எழுத்து போட்டு ஒரு மாயம் ஆச்சி எழுத்து வந்தாலும் வரும் அதியாய்ன் வராத்தது...........

போஸ்ட்மேன் எழுத்து கொண்டு வாரானோ இல்ல மணியார்டர கொண்டு வாரானோ எங்கனங்கிலம் சந்தைக்கு போவாம பைசா கிட்டாதல்லியாடியே பேக்கயும் ஆட்டிகிட்டு வண்டியேறி போவெயில்லியா அப்பம் பாக்கியாம்டியே........

ஆமா பைசா வந்தா இவியல்ட்ட செல்லாமதான் போறேன் மனியென் பைசா அனுப்பி மூணு மாயம் ஆச்சக்காளே அரபி பண்ட போல இல்ல சமயத்துக்கு பைசா தரேல. போன வெட்டு தேங்காய வித்துதான் இங்க செலவு ஓடுவு பாண்டிகாரன் கடைக்கே இருநூறு ரூவா கொடுக்கனும்............,,...

எனக்கு தெரியாதாக்கும் பிள்ளே நீங்க படிய பாடு சும்மா சொன்னேன்டி..... பிள்ளே சுங்கான்கட கோயிலுக்கு ஒரு மால வேண்டி போடுடியே எல்லாம் செரியாவும்......

நாளைக்கு செவ்வாச்ச இல்லியா போவனும் அக்காளே நீங்க வாறியளா.......

கிழவி கிடந்து கடுவறுக்கலைனா வாறண்டியே வண்டிக்கி நேரம் ஆச்சி கிழவி தாவாரத்துல கிடக்கு சிறு அனக்கம் காட்டிக்கடியே........

சரி அக்காளே நான் பாத்திகிடியேன் எள்ளுபோல கிழங்கு கிட்டிச்சினாலும் வேண்டிட்டு வாருங்க இளையவன் பள்ளில்லேந்து வந்த உடன வயிறு பவுச்சவுன கிடந்து சறுவரிப்பான்.........

இப்படியான அன்பும் நேசமும் நிறைந்த உரையாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன்.........

இன்று இங்கு எல்லா வீட்டிலும் பைக்கும் காரும் வந்தாயிற்று காம்பவுண்டுகள் ஆளுயரத்திற்கு எழுந்து நிற்கின்றன நடு வீட்டில் ஐம்பத்தைந்து இன்ச் டிவியும் கைகளில் ஸ்மாட் போன்களும் நிறைந்தாயிற்று...........

பணம் பெருகி மனம் இறுகி கிடக்கு என் குமரியின் வாழ்வியல்..........

Courtesy: Kumari Kizhavanar


   2  |