For Advertising... Please Contact - 9940542560

பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி Eco Brick...


நாகர்கோவில் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில்
மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சுமார் 110 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு 441 பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி eco brick தொழில்நுட்பத்தில் மாநகராட்சி வேப்பமூடு பூங்காவில் மரங்களை சுற்றி 2அடி உயரம் 7 அடி அகலத்தில் திண்ணை கட்டப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி வரும் நாட்களில் மாநகராட்சி பூங்காக்களில் உள்ள அனைத்து மரங்களிலும் இதுபோன்ற சுவர்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
Pic Courtesy: Jackson Herby

மேலும் மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு தற்பொழுது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வும்.
*பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்... சுற்றுச்சூழல் காப்போம்...*
Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |