Kanyakumari District Weather - கன்னியாகுமரி மாவட்டம் வானிலை

Kanyakumari weather update 14/09/2020 4:10pm
=================[
கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி மழை பொழிந்து வருகிறது நேற்றும் பல்வேறு பகுதிகளில் மாவட்டத்தில் மழை காணப்பட்டது, தென்மேற்கு பருவ காற்று காரணம் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இரவு ,அதிகாலை நேரங்களில் மழை காணப்படும், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களை பொறுத்தவரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை காணப்படும் வட கிழக்கு உட்புற பகுதிகளில் மலை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை காணப்படும், படம் -> 3 ல் காட்டப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள மலை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை காணப்படும், அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காளிமலை, அகஸ்தியர் தெற்கு மலை, நாகமலை, வீரபுலி கட்சாபன்மலை, அப்பர்கோதையாறு, மணலிகாடு, மைலார்,குற்றியார், அப்பர்கோதையார் அணையின் நீர்பிடிப்பு பகுதி, லோயர் கோதையாறு, குட்டியார் அணைகட்டு, சின்ன குட்டியார் அணை, முத்துகுழிவயல் , பாலமோர் , மாறாமலை , தோட்டமலை, அசம்புமலை, மஹிந்திரகிரிமலை உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் உயரமான மலை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை காணப்படும்!!!


கன்னியாகுமரி மாவட்டமாவட்டத்தில் இன்று 14/09/2020 காலை 8:30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்,

================

லோயர்கோதையார்

அணை--->11mm

அப்பர்கோதையாறு

அணை---->10mm,

பாலமோர்--------->9.4mm

பேச்சிபாறை

அணை---->8.4mm

சுருளோடு---------->6.4mm

முள்ளங்கினா

விளை----->4.2mm

பெருஞ்சாணி---->3.8mm


என்னும் அளவில் மாவட்டத்தில் மழை பதிவாகியுள்ளது,

----------

திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்,

வற்கலா----------->13.2mm

பெரிங்கமலா--->13mm

நெடுமங்காடு-->8.8mm

திருவனந்தபுரம்

Airport-->8.2mm

வெள்ளோணி-->8mm

நெய்யற்றின்கரா->6mm

திருவனந்தபுரம்

City------>5.5

----------------:

லட்சதீவு பகுதியில்,

அமினிதிவி------->4.1mm

மினிகாய்---------->3.9mm

அகத்திairport--->1.6mm

-------------

இந்த மாதம் செப்டம்பர் ஆரம்பித்து 1/09/2020 முதல் இன்று 14/09/2020 வரை குமரி மாவட்டம் அப்பர்கோதையாறு -- 210 mm , லோயர் கோதையாறு 194 mm பதிவாகியுள்ளது, !!

இதே இது தென்மேற்கு பருவ மழை காலம் ஆரம்பித்து 1/06/2020 முதல் இன்று வரை --> அப்பர் கோதையாறு -->1313 mm ம் , லோயர் கோதையாறு -->980mm பதிவாகியுள்ளது!!


Courtesy: கன்னியாகுமரி மாவட்டம் வானிலை





Showing 1 to 2 of 2 (1 Pages)