காப்பகங்களில் சேர்க்க முயற்சியுங்கள்!


இன்று நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சடை முடியோடு ஒருவர் சில வருடங்களாக அந்த பகுதியில் சுற்றி திரிவதை அறிந்தோம், அவரை உடனடியாக ஆய்வாளர் Sam AB Positive அவர்கள் உதவியோடு அழைத்து சென்று தலை முடி திருத்தி, குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து அன்னை காப்பகத்தில் கொண்டு சேர்த்தோம் சடை முடியோடு இருந்த அவரின் தோற்றம் மாறி நம்மை போல் ஒருவராய் அவரின் தோற்றத்தை கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றோம்,உங்கள் பகுதிகளில் இவரை போன்றவர்கள் எவரேனும் இருந்தால் அவர்களை இது போன்று காப்பகங்களில் சேர்க்க முயற்சியுங்கள், இந்த மனிதநேய பணியில் உடன் இருந்த மனிதம் தேடி குழு நண்பர்கள் தினேஷ்,லோகன்,வினோ அவர்களுக்கும் நன்றிகள் Logan Ramaswamy Ab Positive அண்ணன் அவர்கள் தந்தையும் ஒரு இளைஞர்போல எங்களுடன் இணைந்து பணியாற்றினார் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ,மேலும் அவரின் கையில் ஒரிசா மொழியில் பச்சை குத்தப்பட்டு இருப்பதை கண்டோம் கண்டிப்பாக ஒரிசா மாநிலத்தை சார்ந்தவராகதான் இருக்கும் முடிந்தவரை இதை பகிருங்கள் அவர் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் இவரை கொண்டு சேர்ப்போம் !
Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 618