
புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பைங்கல், குருவிக்கரம்பி கிராமங்களை சார்ந்த டெல்டா விவசாயிகளை சந்தித்து கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் சார்பாக எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம் ! புயலின் பாதிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது ஊடகங்கள் 10% புயலின் தாக்கங்களை கூட வெளிக்காட்டவில்லை என்பதுதான் உண்மை தென்னை விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பல குறு நில விவசாயிகள் நிலமைகள் தான் கேள்விக்குறியாக உள்ளது? நாங்கள் செய்தது சிறு உதவியாக இருந்தாலும் இவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசாங்கத்தோடு இணைந்து தொண்டு நிறுவனங்களும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த புயல் நிவாரணமாக 150 உணவு பைகள் மற்றும் நாப்கின்கள், மெழுகுவர்த்திகள், வழங்கிய நிலம் அமைப்பு சார்ந்த நண்பர் Venkat S Arya அவர்களுக்கும் 400 கிலோ காய்கறிகள் மற்றும் குடிநீர் ஏற்பாடு செய்த ஆய்வாளர் Sam AB Positive அவர்களுக்கும் மேலும் பேஸ்ட், பிரஷ் மற்றும் உணவு பொருட்கள் வழங்கிய நண்பர் பி.என் டிரேடர்ஸ் அவர்களுக்கும்,1000 உணவு பொட்டலங்கள் வழங்கிய WGTC, Western Ghats Trekking Club உறுப்பினர்களுக்கும் குழந்தைகளுக்கான ஆடைகள் வழங்கிய அண்ணன் Selvakumar Jesudasan Henry D அவர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கிய நண்பன் Jesho Jenish அவர்களுக்கும் நன்றிகள் !




Posted by







