புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்


இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. படத்தில் உள்ள படத்தில் உள்ள 1969 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட என்னுடைய ஜாவா பைக் 48 ஆண்டுகள் பழமையானது மேலும் இன்றளவும் சிறந்த நிலையில் உள்ளது ! 

புதிய ஜாவா மோட்டார் சைக்கிள் 293 சிசி திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் சைக்கிள் 293 சிசி இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது. நவம்பர் 15, ஜாவா மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜாவா மற்றும் ஜாவா 42 என இரண்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை மொத்தம் 9 கலர்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜாவா பைக்கின் விலை 1.64 லட்சம் ரூபாயாகவும், ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை ரூ. 1.89 லட்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை அடிப்படையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடங்களுக்கு தகுந்தவாறு விலையில் மாற்றம் இருக்கும்.

Dison Duke Posted by Dison Duke

Dison Duke

views: 1819
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!

Related News