Neelakandeswarar Temple, Kalkulam (7th Shivalayam)
அருள்மிகு ஸ்ரீ நைனார் நீலகண்ட சுவாமி திருக்கோவில்...
நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர் இது. இங்குள்ள கல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற நயினார் நீலகண்ட சுவாமி திருக்கோயில். கேரளப் பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கட்டுமானங்கள் அமைந்த கோயில் இது. மிகவும் பழமையான இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களை நிறுவித் திருப்பணி செய்தவர் மன்னர் திருமலை நாயக்கர். கேரள மன்னரான மார்த்தாண்ட வர்மாவும் திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை அழகுப்படுத்தியிருக்கிறார். இங்கே பிராகாரத்தில் கையில் விளக்கு ஏந்திய அழகுப் பாவையர் சிலைகள் ஒரே வரிசையில் ஏராளமாக நிற்பது மிக அழகு!
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
பன்னிரு சிவாலயங்களுள் ஒரு சிவாலயம்
சிவாலய ஓட்டம் காணும் சிவாலயம்
கோவிந்தா கோபாலா நாமம் கேட்கும் சிவாலயம்
நிமிர்ந்த வானுயர கோபுர அழகு சிவாலயம்
அழகு தெப்பக்குளம் அமைந்த சிவாலயம்
அழகு தீர்த்த மண்டபம் அமைந்த சிவாலயம்
பச்சைப் பசேல் அழகு மிளிரும் சிவாலயம்
திருமலை நாயக்கர் அருட்பணி செய்த சிவாலயம்
மார்த்தாண்ட வர்மா திருப்பணி செய்த சிவாலயம்
அழகு பிரகாரம் அமைந்த சிவாலயம்
பாங்குற பாவை விளக்குகள் அமைந்த சிவாலயம்
அழகு மிளிரும் சிவாலயம்
நைனார் நீலகண்டசுவாமி சிவாலயமே...
- நாஞ்சில் வீரா
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Rajesh Kumar
Picture Courtesy: Arun Radha Krishnan
Times: 5.00 AM to 11.00 AM and 5.00 PM to 8.00 PM.
Festivals:
Shivaratri
Thiruvadirai
Margazhi festival
Navaratri Utsavam
Vijayadasami Theppam
Panguni Uthiram Peruvizha
Thirukalyanam