For Advertising... Please Contact - 9940542560

Thirumalai Mahadevar Temple, Munchirai (1st Shivalayam )

Sivalaya Ottam Temples  |        |   

திருமலை: சிவாலய ஓட்டத்தினர், திருமலை எனும் திருத்தலத்தில் உள்ள ஈசனை முதலில் வழிபடுகிறார்கள். மூலவர், சூலபாணி என்று போற்றப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டு இவரை 'முஞ்சிறை திருமலைத்தேவர்' என்று அழைக்கிறது. சீதையை இராவணன் முதலில் சிறை வைத்த இடம் இது என பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவத்தலத்தில் இராமர் வழிபட்டார் எனும் செவிவழிக் கதையும் உண்டு. திருமலைநாயக்கரை அவரது அன்னை கருவுற்றிருந்த போது இக்கோவிலில் வழிபாடு நடத்தினார் என சொல்லப்படுகிறது. இங்கு சிவ சன்னிதிக்கு இடப்புறமாக விஷ்ணு சன்னிதி உள்ளது. கோவில் தமிழக மலையாள கட்டிட அமைப்புகளுடன் அமைந்தது. பொதுவாக கேரள கட்டிட அமைப்பில் சில சீனத்தன்மைகளை காணலாம். (அல்லது சீன கட்டிடத்தின் சில கூறுகள் தென் மேற்கு பாரத கடற்கரையிலிருந்து சென்றவையோ?) சின்ன குன்றின் மீது எழிலுற அமைந்த இத்திருக்கோவிலில் ஒரு சிறு நீர்தேக்கமும் உள்ளது.


Photo Credits: Prathesh PK

Thirumalai Mahadevar Temple at Munchirai in Kanyakumari District of Tamilnadu.

Timings: 5.00 AM to 11.00 AM and 5.00 PM to 8.00 PM.

     |   

Other Pages