
சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பல்வேறுபகுதிகளில் பெண்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..
கடையாலுமூடு தர்மசாஸ்தா கோயில் வளாகத்தில் பெண்கள் பிரார்த்தனை மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடந்தது.
இதில் பேசிய கல்லூரி விரிவுரையாளர் சவிதா ராஜேஷ், சபரிமலையை சுற்றுலா தலமாக மாற்ற கேரளா அரசு எடுத்துவரும் முயற்சியின் முதற்படி தற்போதைய தீர்ப்பு மூலம் வெற்றி பெற்றிருக்கிறது என்றார்.
காட்டிற்குள் இருந்த திருப்பதியை சுற்றுலா தலமாக மாற்றிய போல் சபரிமலையை சுற்றுலா தலமாக மாற்ற கேரளா அரசு விரும்புகிறது.
இதற்காக தான் காங்கிரஸ் அரசு எடுத்த முடிவை மாற்றி பிணறாயி அரசு நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர்.
...கடவுள் நம்பிக்கையுடைய பெண்கள் எவரும் சபரிமலையில் குறிப்பிட்ட வயதில் செல்ல முடியாததை பெண்களுக்கான உரிமை மறுப்பாக பார்க்கவில்லை - சவிதா ராஜேஷ்.


Posted by