பொய்கை அணையில் விரிசல்

ஆரல்வாய்மொழியில் கடந்த 2-10-2000 அன்று அப்போது முதல் வராக இருந்த திரு.கருணாநிதி அவர்களால் பொய்கை அணை திறந்து வைக்கப்பட்டது இதன் கொள்ளளவு 42. 62 அடி அணையின் நீளம் 12 02 மீட்டர். இதில் ஆற்று மதகுமூலம் 201. 38 ஹெக்டேர் நிலங்களும் கால்வாய் மதகுமூலம் 182. 22 ஹெக்டேர் நிலங்களும் பாசன வசதி பெறும்.

ஆற்று மதகுமூலம் கரும் பாட்டு குளம், கிருஷ்ணன் குளம், செண்பகராமன் புதூர் பெரியகுளம், தோவாளை பெரியகுளம், பொய்கை குளம், குட்டிகுளம், ஆரல்வாய்மொழி - பெரியகுளம், வைகை குளம் ஆகிய குளங்களும் கால்வாய் மதகு மூலம் அன்னுவத்திகுளம், லெட்சுமி புது குளம், அத்திகுளம், சாலை புது குளம், தெற்கு சிவகங்கை குளம், மேலபாலார் குளம், கீழ பாலார் குளம், பழவூர் பெரியகுளம் ஆகிய குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதன் மூலம் 1357 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது, இருந்தும் கட்டியது முதல் இதுவரையில் இந்த அணை நிரம்பாமலே உள்ளதால் விவசாயிகள் இதனை இலவு காத்த கிளி போல எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அணைக்கு நீர் ஆதாரமாக திகழும் சுங்கான் ஓடை ரூ 3 கோடி செலவில் சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார். இந்
நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.

தற்போது அணையின் மறு கால் தடுப்பு சுவருக்கு அடியில் கசிவு ஏற்பட்டு பெரும்பாலான நீர் வெளியேறி வருகிறது. இதனால் கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்டு இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும் நீர் பெருகும் நிலையில் இதனால் உடைப்பு ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

எனவே உடனடியாக நீர் கசிவு ஏற்படுவதை தடுத்திட வேண்டுமென பச்சைத் தமிழகம் கட்சி வலியுறுத்தி உள்ளது
இது தொடர்பாக கட்சியின் மாவட்ட தலைவர் A. S. சங்கரபாண்டியன் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து இது பற்றி உரிய விசாரணை நடத்திடவும் வலியுறுத்தி உள்ளார்.

views: 2244
   

Related News