For Advertising... Please Contact - 9940542560

நாகராஜா கோவிலில் கருவறை மேற்கூரை மாற்றி...

Nagercoil  |        |   

நாகராஜர் வீற்றிக்கும் மூலஸ்தானத்தின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு இருக்கும். கருவறை மேற்கூரையானது ஆடி மாதத்தில் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் மேற்கூரை மாற்றியமைக்கும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில். நாகர்கோவில் மாநகருக்கு பெயர் காரணமாகவும் இக்கோவில் திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கோவிலில் நாகராஜர் பிரதான கடவுளாக வீற்றிருக்கிறார். மேலும் சிவன், அனந்தகிருஷ்ணர், துர்க்கை, பிள்ளையார், முருகன் ஆகிய சன்னதிகளும் உள்ளன.
இதில் நாகராஜர் வீற்றிக்கும் மூலஸ்தானத்தின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டு இருக்கும். கருவறை மேற்கூரையானது ஆடி மாதத்தில் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நாகராஜா கோவிலில் கருவறை மேற்கூரை மாற்றி அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கோவில் தந்திரிகள் மேற்கூரையை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாகராஜர் குளிந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மேற்கூரையானது ஓலையால் வேயப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் கோவிலில் தினசரி பூஜைகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது.

Courtesy: நாஞ்சில் சொந்தங்கள்


     |   

Other Pages