காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை


இவர்தான் கதாநாயகன் மனோஜ் குப்தா 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4000 கிலோமீட்டர்கள் சைக்கிள் பயணம் செய்து ராணுவ கொடி நாள் குறித்த விழிப்புணர்வு வேண்டி தன் இலக்கை அடைந்தவர்.

தம்பி ஜோ'விடம் இருந்து அழைப்பு அண்ணா ஒருவர் வருகிறார் காஷ்மீரில் இருந்து சைக்கிள் பயணமாக அவரை வரவேற்று தங்கும் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ள, சரி வீட்டுக்கு வா என்று இருவருமாக அவரை சந்திக்க செல்ல அங்கு மிக பெரிய கப்பற்படை அதிகாரிகள் சூழ ராணுவ உடை அணிந்து அவர்களின் வாகனத்தில் இருந்தனர். அப்பொழுது புரிந்தது இவரின் தாக்கம் . கோவளம் பகுதிக்கு சென்று வரவேற்று குமரி நோக்கி அழைத்து வந்தோம் . புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்து கொடுத்தோம்.


செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு அவருடன் நெருங்கி பேசும் வாய்ப்பு கிடைத்தது 40 நாட்கள் பயணம் கொடுத்து இருந்த புத்துணர்ச்சியும் அனுபவமும் அவர் பேச்சில் இருந்தது தன்னை பெரிய அதிகாரியாக காட்டி கொள்ளவில்லை , அங்கு இவரை வரவேற்க வந்துஇருந்த அதிகாரிகளை விட இவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்பது பேசிய பிறகு தான் தெரிந்தது (Lieutenant colonel). 40 நாட்கள் தனிமை பயணம் அவரை எங்களுடன் மிக நெருக்கமாக நட்பு வட்டத்திற்குள் அழைத்து சென்றது . அனைவரும் சென்ற பிறகு அவரது அறையில் 2 மணி நேரங்கள் எப்படி போனது என்று தெரியாத அளவு உரையாடல்கள் தொடர்ந்தது. நிறைய பகிர்ந்து கொண்டார். அவற்றை தனி பதிவுகளாக பதிய விரும்புகிறேன்.

என் வாழ்நாளில் நான் பழகிய உயர்ந்த அதிகாரம் கொண்ட நபர் இவர் (அரசியல் தவிர்த்து) இவரின் வார்த்தைகளில் என்னை அதிகம் ஈர்த்தது 'Stand with crowd ; dine with kings'

ராணுவத்தை குறித்தும், உளவியல் குறித்தும் இவர் பகிந்து கொண்ட உண்மைகள் வாழ் நாள் பொக்கிஷம்.


Sam Loy Posted by Sam Loy


views: 5187
   

Hi , are you passionate about sharing your knowledge , tips or thoughts by video or blog ? Please write to us @ kanyakumarians.com@gmail.com


Related Blogs