Veppamoodu Junction, Nagercoil
படிக்காத மேதை ,கல்வி கண் திறந்த வள்ளல் பெருந்தலைவர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 119th பிறந்த நாளில் போற்றி வணங்குவோம்...
Courtesy: Rajesh Kumar
வேப்பமூடு ஜங்ஷனும்.. முந்திரிப்பருப்பும்..

நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் பெரிய பிளாஸ்டிக் பைகளில் முந்திரிப்பருப்பு அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும், அவற்றை பெண்கள் பலர் விற்பதையும் தினமும் காணலாம். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இவர்கள். முந்திரிக்கொட்டைகளை இவர்கள் வியாபாரிகளிடமிருந்து விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து பக்குவமாக வறுத்து இங்கே கொண்டு வந்து பாக்கெட்டில் அடைத்து விற்கிறார்கள்.
100 கிராம். ரூ 100 .
250 கிராம்வாங்கினால் 20 ரூபாய். குறைத்து தருபவர்களும் உண்டு.
பெரும்பாலும் காலையில் கொண்டு வரும் முந்திரி பருப்புகள் மாலைக்குள் கிட்டத்தட்ட விற்பனை ஆகி விடுமாம். காரணம், ஃபிரஷ் + நல்ல ருசி.
கடைகளில் வாங்கும் மு.பருப்பை விட இவர்களிடம் வாங்கும் முந்திரி ப.க்கு ருசி அதிகம். பருப்பு வாங்கப் போனால் ருசி பார்க்க சாம்பிளுக்கு இரண்டு பருப்பு தருவார்கள். பிடித்தால் வாங்கினால் போதும்.
அப்புறம் குமரியில் அண்டிப் பருப்பு என்ற செல்லப் பெயரும் முந்திரிப்பருப்புக்கு உண்டு என்பதை சொல்லவில்லை எனில் குமரி மண்ணின் நேசமிகு குமரியன்கள் என்னை திட்டுவார்கள் என்பதைக் கூறிக் கொண்டு, இரண்டு அண்டிப் பருப்பை வாயில் போட்டு சுவைத்தபடி கால் கிலோ அ.பருப்பு வாங்கி விட்டு இப்போது உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்
வெறிச்சோடிய நகரம்.
யாருக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்? யாரும் இவர்களை காத்திருக்க வைக்கவில்லை.
இவர்களது பசி இவர்களை காத்திருக்க வைத்திருக்கிறது.
இவர்கள் வெறும் கைகளோடு காத்திருக்கிறார்கள்.
கொராணா ஊரங்கில் முப்பது நாட்கள் தாக்கு பிடித்த இவர்கள், இப்போது வெளிவந்துள்ளார்கள்.
பிழைத்தல் என்கிற கொடிய வாழ்க்கை அவர்களை வீட்டிலிருந்து வெளியில் துரத்தியுள்ளது.
Courtesy: Jawahar Clicks
Clicked By Riya Clicks
Clicked By Riya Clicks
Showing 1 to 12 of 12 (1 Pages)