For Advertising... Please Contact - 9940542560

உலக தேனீக்கள் தினம் -World Bee Day

     |   

இன்று(மே 20) உலக தேனீக்கள் தினம்.

தேன் பெட்டியில் இருந்து தேனடையை எடுத்து சுவைக்கும் போது கிடைக்கும் தித்திப்பு அலாதியானது.

தேனீ வளர்ப்பு பற்றி கொஞ்சம் பார்ப்போமா?

Pic Courtesy: Dison Duke

தேனீ வளர்க்கும் பெட்டியை இரண்டு அடுக்கா பிரிச்சிருப்பாங்க. மேல் பகுதி அடுக்கில் 5 சட்டம் இருக்கும். கீழ் பகுதியில் ஆறு சட்டம். மேல் அடுக்குல தேன் சேகரிக்கவும் கீழ் அடுக்கு குஞ்சுகளுக்கும் தேனீக்களுக்கும் ஒதுக்கணும். கீழ்பகுதி அடுக்கில் தேனீ அடைகட்டி வாழும். தேன் பெட்டி அடுக்குச்சட்டம் ஒவ்வொன்றும் 3 செமீ இடைவெளியில் இருக்கும். இது அடை ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான ஏற்பாடு. சட்டங்கள் மேற்பகுதி நோக்கி இருப்பதால் எளிதில் உருவி எடுக்க முடியும்.

தேன் பெட்டி இரண்டு அடி கொண்ட ஸ்டாண்டில் நிலத்தில் தாங்கி நிற்கும் படியாக வைக்க வேண்டும்.
இரண்டடி உயரத்தில் பெட்டியை அமைக்கும்போதுதான் தேனீகள் சேகரித்துக்கொண்டு வரும் தேனை தேன்பெட்டியில் வைக்க முடியும் என்பதோடு நமக்கும் பெட்டிகளை பராமரிக்கவும் முடியும். பெட்டியின் மேல்பகுதியில் பாலீதீன் கவர் கொண்டு பொதிந்துவிடுவது நல்லது. இது பெட்டியை வெயில் மழையிலிருந்து பாதுகாக்கும்.

பெட்டியின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய துளை வழியாக தேனீக்கள் உள்ளே வந்து போக இயலும். பெட்டிகள் ஆறு அடி இடைவெளியில் வைப்பது நல்லது.
ஒவ்வொரு பெட்டியிலும் ராணித்தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ என மூன்று வகை தேனீ இருக்கும்.

இதுல கில்லாடி யாருன்னா ராணித்தேனீதான். பெட்டியில கண்டிப்பா ராணித்தேனீ இருக்கணும். பெட்டியில் இருக்கிற இளம் பருவ தேனீக்களின் தலையில உற்பத்தி ஆகுற “ராயல் ஜெல்லியை” சாப்பிட்டு முட்டை வைக்கிறதுதான் ராணித்தேனியோட வேலை.

லைஃபில் ஒரே ஒரு தடவைதான் இது ஆண் தேனியோட உறவு வைக்கும். மூணு வருஷம் உசிரோட இருக்கும். ஒரு தேனீ குடும்பம்னா ஒரே ஒரு ராணித்தேனிதான் இருக்கும்.

கூட்டுல அடைகட்டுறது. இளம் தேனீக்களை பராமரிக்கிற வேலை, மகரந்தம் இருக்கிற திசையை காண்பிக்கிறது, தேனை சேகரிக்கிற வேலை எல்லாத்தையும் வேலைக்கார தேனீக்கள் செய்யும்.

ஆயிரக்கணக்கில் இருக்கும் இவற்றின் ஆயுள் மூன்று முதல் 4 மாதங்கள். இனப்பெருக்கத்துக்கு மட்டும் பயன்படும் ஆண் தேனீக்கள் ஒவ்வொரு பெட்டியிலும் பத்துக்கு மேல் இருக்கும். ஆயுள் இரண்டு முதல் நான்கு மாதங்கள்.

ராணித் தேனீ, 14 முதல் 21 நாட்களிலும்; வேலைக்காரத் தேனீ 21 நாட்களிலும் ஆண் தேனீ 24 நாட்களிலும் முட்டையில் இருந்து வெளியில் வரும். வெளிவந்ததுமே ராணித் தேனீ பறக்க ஆரம்பிச்சுடும்.

ஒரு பெட்டியில் உள்ள ராணித் தேனீக்கு வயதாகிவிட்டால், கூட்டில் உள்ள ஒரு தேனீயைத் தேர்ந்தெடுத்து, அடுத்த ராணித் தேனீயாக பதவியில் வைச்சுடும். . வயதான ராணித் தேனீ இறந்துவிட்டால், இளம் ராணித் தேனீ பதவிக்கு வந்துடும்.

தேனீ வளர்ப்பில் கவனிக்க வேண்டியது தேன் கூட்டில் ராணித்தேனீ கூட்டில் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டியது ஆகும். தேனடையில் உள்ள பெரிய அறை ராணித்தேனீக்கானது. அது அங்கே இல்லை என்றால் வேறு பெட்டியில் இருந்து ஒரு ராணித் தேனீயைப் பிடித்து வைக்க வேண்டும்.

இப்படி தித்திக்கத்தித்திக்க நிறைய சொல்லிட்டே போகலாம். எல்லோருக்கும் இனிமை நிறைந்த உலக தேனீக்கள் தின நல்வாழ்த்துகள்!!


Courtesy:திருவட்டாறு சிந்துகுமார்

     |