Kanyakumari District - கன்னியாகுமரி மாவட்டம்

கொராணா தந்த வரம்.....

கழிந்த பதினைந்து வருடங்களுக்கு பிறகு, இப்போது குமரி எழில் சூல்(ழ்) உலகாக மாறிவருகிறது. காலைப் பொழுதில் பனியிறங்கி நுனிப்புல்லில் டாலடித்து துளிர்த்து நிற்கிறது.எங்கு சென்றாலும் ,மெல்லிய ஈரக்காற்று எங்கள் மேனியை தழுவி கடக்கிறது.

காலையில் இதமான வெயிலும்,ஏதோ ஒரு மந்தமான நிலையில் கருத்த மேகங்கள் முகத்தை மூடியபடி எங்கள் மேல் கடந்து நகர்கிறது.

மதியத்திற்கு பின் மாலையில் சாரலாக ஆரம்பிக்கிற மழை பேரிரைச்சலோடு பெரும்மழையாக பெய்து குளிர்ந்து தணிக்கிறது.


மழை ...
சாலை முழுக்க பரவிக்கிடக்கும் வெள்ளை நிறப்பவுடர் தூவல்களையும் ,ஊரெங்கும் தெளித்து வைத்திருக்கும் கிருமி நாசினியையும் ஒருசேர கழிவிப்போடுவது மிகப்பெரிய ஆசுவாசம்.

குமரி குளிர்ந்து, மீண்டும் பூமாரி மழை பொழிவதின் காரணம் மக்களே நாம் வீட்டில் அடங்கிடப்பதே.

கார்பனின் அளவு பூமியில் குறைந்திருக்கிறது.ஆக்சிஜன் அளவும் நிறைந்திருக்கிறது. பறவைகள், ஊர்வண, பூச்சிகள், வண்டுகள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் என எல்லா ஜிவராசிகளும் இங்கே பல்கிப் பெருகி ரீங்காரமும், குருவிகளின் பாட்டும் நம் காதில் விழுவதை கேட்கமுடிகிறது.


இயற்கை இங்கே புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.இயற்கையை ரசித்து இயற்கையோடு வாழ்கிறோம்.


Courtesy: ஜவஹர்.ஜி



Showing 1 to 15 of 23 (2 Pages)