For Advertising... Please Contact - 9940542560

வடசேரி தற்காலிக சந்தையை மீண்டும் திறக்க...

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் பணிபுரியும் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்காலிக சந்தை காலவரையறையின்றி மூடப்பட்டது.....

தற்காலிக சந்தை மூடப்பட்டு 20 நாட்களை கடந்து விட்டதால் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கடைகள் அமைக்க வியாபாரிகள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.....

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS மற்றும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தற்காலிக சந்தை மற்றும் கனகமூலம் சந்தையில் திறந்த வெளியில் உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.....

ஆய்விற்குப் பிறகு ஆணையர் தலைமையில் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் மற்றும் நாகர்கோவில் RDO திருமதி. மயில் ஆகியோர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.....

கலந்தாய்வு கூட்டத்தில் சந்தை அமைக்கும் வியாபாரிகள் கடைகள் அமைக்கும் பொழுது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் அளவிற்கு தடுப்புகள் அமைத்து அரசின் கட்டுப்பாடுகளின் நடைமுறைப்படி வாடிக்கையாளர்களுக்கு கைகள் சுத்தம் செய்யும் சனிடைசர் வழங்கப்படவேண்டும் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப் பிடிப்பது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் தற்காலிக சந்தை அமைக்க அனுமதி வழங்கப்படும்.....

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |