For Advertising... Please Contact - 9940542560

கொரேனாவின் ஆட்டம் விஸ்வரூபம்...

Corona Updates  |        |   

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரேனாவின் ஆட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது கடந்த 10நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 75% கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் சராசரியாக 200ல் இருந்து 650தை கடந்துவிட்டது..

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் தொற்று பரவியது போல் தற்போது குமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தையில் இருந்து சமூக தொற்றாக மாறியுள்ளதாக குமரிமக்கள் பீதி அடைந்துள்ளனர்...பிறந்த ஆறு நாளான,ஐந்து நாட்களான குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் குமரியில் பல டாக்டர்களுக்கும்,போலீசாருக்கும் இருப்பதை அறியும் போது மாவட்ட நிர்வாகமும்,சுகாதார பணியாளர்களும்,மாநகராட்சியினரும் இது வரை செய்த பணிகளை விடவும் இன்னும் பண்மடங்கு செயலாற்றினாள் தான் இந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என பல தன்னார்வர்கள் பொதுமக்களும் கை கூப்பி அரசு நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்..
இது குறித்த செய்தி குறிப்பு...

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் மாநகராட்சி செயல்படுகிறது.இங்கு ஆசியாவில் மிகபெரிய சந்தையாக அப்டா மார்கெட் மற்றும் புகழ் பெற்ற கனகமூலம் சந்தையும் குமரிமாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல கேரளாவில் இருந்து விவசாயிகளுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க சந்தைகளை கலைத்து வடசேரி பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்தனர்.ஆனால் அங்கு இருந்து தான் தினம் தினம் கொரோனா உற்பத்தி பெருகியது என்று தெரியாமல் இருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிக சந்தையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வரவே இன்று ஒரே நாளில் மட்டும் 100ரை நெருங்கியுள்ளது..அதேபோல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி காவல் நிலையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கும் நோய் தொற்று கண்டறிப்பட்டுள்ளது.
ஏற்கனவே குமரிமாவட்டத்தில் கோட்டார் காவல்நிலையம்,ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தை அடுத்து வடசேரி காவல்நிலையமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் பொதுமக்கள் போலீசாரை கண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்..

கொரோனா யாரையும் விட்டு வைக்க வில்லை தாயின் வயிற்றில் தனித்திரு விழித்திரு என்று சிவனே என்று இருந்த பிறந்த ஆறு நாளான,ஐந்து நாட்களான குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் குமரியில் பல டாக்டர்களுக்கும்,போலீசாருக்கும் இருப்பதை அறியும் போது மாவட்ட நிர்வாகமும், சுகாதார பணியாளர்களும், மாநகராட்சியினரும் இதுவரை செய்த பணிகளை விடவும் இன்னும் பண்மடங்கு செயலாற்றினால் தான் இந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என பல தன்னார்வர்கள் பொதுமக்களும் கை கூப்பி அரசு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்..

இந்த மாதம் இறுதியில் ஆயிரத்தையும் தாண்டும் என்பது கண் முன்னே தெரிகிறது.
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பரவியது போல் தற்போது குமரிமாவட்ட வடசேரி சந்தையில் தொற்று பரவலாக மாறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதி அடைய செய்துள்ளது..

குமரி மக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனித்திரு விழித்திரு என இருந்தால் தான் மட்டுமே மேற்கொண்ட நாட்களில் நாம் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ முடியும் என்பதை உங்களின் ஒருவனாக தெரிவித்து கொள்கிறேன்....

Courtesy: Winnings

     |   

Related Posts