For Advertising... Please Contact - 9940542560

மீண்டும் 'விசில் சப்தம்' நகரில் கேட்க முடிந்தது...

Courtesy: Jawahar Clicks

எழுபத்தியோரு நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது. சுமார் 182 பஸ்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. பயணிகளற்ற பஸ்பயணம் என்று தான் சொல்லவேண்டும்.

காலையில் பல ஊர்களில் பொதுமக்களும் குழந்தைகளும் மிக அதிசயமாகவே பஸ்கள் ஊருக்குள் வருவதை காண்பதற்கு வீடுகளின் வெளியே நின்றனர். வானத்தில் பறக்கும் விமானத்தை கண்டவுடன் ஊர்க்காடுகளில் குழந்தைகள் ஆர்பரித்து 'அண்ணா போவு'... 'அண்ணாபோவு'...என சுட்டிக் காண்பித்து கூக்குரல் இடுவதைப் போலவே பஸ்கள் வரும்போது சப்தமிட்டு உற்சாகமடைந்தனர்.

நாகர்கோவில் குளத்து பஸ் ஸடான்ட்டில் மிக குறைவான பயணிகளே பஸ்களுக்காக காத்திருந்ததையும் காணமுடிந்தது. பயணிகள் அமர்வதற்கு பயன்படுத்தும் நாற்காலிகள் எல்லாமே துறுபிடித்தும் உடைந்தும் மிக மோசமான நிலையில் இத்துப்போய் கிடக்கிறது. கார்ப்பரேஷன் உழியர்கள் கிருமி நாசினி தெளிப்பானை வைத்து பஸ்களில் தெளிக்கிறார்கள். கிருமிநாசினி தெளித்த பஸ்களில் பயணப்படுகிற பயணிகள் துர்பாக்கிய சாலிகளே அத்தனை கப் அடிக்கிறது.

குளச்சல் ரூட் பஸ்ஸின் முன்புறம் மிக சிரத்தையுடன் வேப்பிலையை கட்டி வைத்திருந்தனர். பஸ்ஸின் கண்ணாடியை துடைக்கும் 'வைப்பர்' வேலை செய்ய வில்லையாம், ஓட்டுனர் அருகில் இருக்கும் ரியர் கண்ணாடியும் தனியாக கழன்று ஓட்டுனரின் கைகளில் இருந்தது.

Courtesy: Jawahar Clicks

பயணப்பட காத்திருந்த இரண்டு சகோதரிகளிடம் பேச்சு கொடுத்தேன்,நாங்கள் மூலச்சலிருந்து சின்னமுட்டத்திலிருக்கும் எங்கள் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு வேலைக்கு போகிறோம். காலை ஒன்பது மணிக்கு கன்னியாகுமரி போகிற பஸ்ஸில் ஏறி பயணப்பட்டு வந்தோம். குளத்து பஸ் ஸடான்ட் வந்த வுடன் இதற்கு மேல் இந்த வண்டி போகாது என்று இங்கே இறக்கி விட்டுட்டாங்க. காரணம்கேட்ட பிறகு பஸ்ஸில் தான் ஆளில்லையே உங்கள் இருவருக்குமாக கன்னியாகுமரி வரை போக முடியாது என்றனர்.அப்போது நேரம் பதினொன்னு மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது.

காலையில் எல்லாம் பஸ்ஸில் பயணிகளே வரவில்லை,பின்னர் இப்போது தான் பயணிகள் வர ஆரம்பித்திருக்கிறார்கள் இனி போக போக மெல்ல பயணம் செய்ய ஆட்கள் வந்துவிடுவார்களென மிக நம்பிக்கையோடு செக்கிங் இன்ஸ்பெக்டர் பெருமாள் கூறினார். குத்துமதிப்பாக பத்து பதினைந்து பேர்கள்தான் பயணப்படுவதையும் காணமுடிந்தது.

ஒரு பஸ்ஸில் இருபத்தைந்து பேர்கள் என, சமூக இடைவெளியோடு பயணம் செய்வார்களா என்பதையும் காலம் தான் முடிவு செய்யும்.

கொராணாவிற்கு ஒரு டிக்கெட் என்று லக்கேஜ் அடிக்கிற நெருக்கடியும், அடிதடிகளும் காமெடிகளுக்கு இனி பஸ் பயணத்தில் பஞ்சம் இருக்காது.

Courtesy: Jawahar Clicks

Courtesy: Jawahar Clicks

Courtesy: Jawahar Clicks

     |   

Other Pages