For Advertising... Please Contact - 9940542560

ஈழத் தமிழர்கள் குடியிருப்பு முகாம்

   1  |   

கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் சுமார் இருநூறு குடும்பங்கள் வாழ்கிறார்கள்.கொரோனா ஊரடங்கு காரணத்தால் இங்குள்ளவர்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழல். பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களுக்கு அன்றாடம் தேவைகளான பலசரக்கு பொருட்கள் கிடைத்தால் பேருதவியாக இருக்கும் என அவர்களது முகாம் தலைவர் திரு. மூர்த்தி எங்களை அணுகி கேட்டுக்கொண்டார்.

நாங்களும் எங்களது முகநூல் மூலமாக நண்பர்களிடம் உதவிகள் கேட்டு விண்ணப்பித்தோம். மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதனை நிரூபிக்கும் வகையில் பல நல்லுள்ளம் கொண்ட எங்கள் நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள்.


எனது சக நண்பர்கள் உதவியோடு
எழுத்தாளர் : பிரபு தர்மராஜ்
புகைப்பட கலைஞர் : ஜான்
பொறியாளர் : ஜெயின் டேவிட் ஆகியோர் இணைந்து திட்டமிட்டு செயல்பட்டோம்.

முகாம் என்பது வழக்கமான நமது குடியிருப்பினைப் போல எளிதில் வெளியாட்கள் செல்லமுடியாது. எனவே முகாமின் அருகில் உள்ள பலசரக்கு கடையின் மூலம், இருபது அத்தியாவசமான பலசரக்கு பொருட்கள் அங்குள்ள முப்பது குடும்பங்களுக்கு வழங்கிட ஏற்பாடுகள் செய்துவிட்டு, பின்னர் முகாமில் உள்ள மக்களையும் சந்தித்து உரையாடி வந்தோம்.


அதன்படி வயதானவர்கள் மற்றும் ஆதரவு அற்ற விதைவகள் குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான பொருட்களை, குடும்பங்களுக்கு 15/4/2020 அன்று வீடுவிடாக சென்று சமுக இடைவெளி பின் பற்றி முகாம் கொரோனா பாதுகாப்பு குழு வழியாக வழங்கினார் முகாம் தலைவர் திரு. மூர்த்தி.

அவர்களது இலங்கை வாழ் அகதிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை உங்களுகள் அனைவருக்கும் தெரிவித்து கொண்டார்கள்....

இதனை சாத்தியம் ஆக்கியது எங்கள் நண்பர்களாகிய நீங்களே...

'இதில் நாங்கள் வெரும் கருவிகளே'

Our special thanks to our friends...

அகதிகள் முகாம் பொருப்பாளர்களுடன்...

Courtesy: Jawahar Clicks

   1  |