For Advertising... Please Contact - 9940542560

தேங்காய் இல்லாத மத்தி மீன்கறி - மத்தி சாள

Kanyakumari Famous Foods  |        |   

மத்தி சாள....


குமரி மக்களின் வாழ்வியலில் ஒன்றிப்போன மீன் வகைகளில் சாள மீன் மிக முக்கியமான மீன் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படும் மிகவும் சத்துள்ள ஒரு மீண் வகை. பொதுவான தேங்காய் போட்டி மீன் குழம்பு வைக்கும் வேணாட்டு சமையல் முறையில் இந்த மீன் சமைப்பதைவிட சேர நாட்டின் தேங்காய் இல்லாத மிளகு ஏத்தி விட்டு வத்தவிட்ட கறியாக வைப்பது மிக மிக சுவையானதாக இருக்கும்.......

ஒரு மன் சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும் எண்ணெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, வெந்தயம் கறிவேப்பலை இட வேண்டும். கடுகு பொட்டி தெறிச்சதும் சிறியதாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி ஒரு கையளவு சேர்த்து வதக்க வேண்டும். அதில் சிறியதாக நறுக்கிய சின்ன உள்ளி ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.............

உள்ளி வதங்கி எண்ணெய் பரிந்து வரும்போது அதில் மஞ்சள் சிறிய அளவு காஷ்மீரி மிளகு பொடி இரண்டரை கரண்டி சேர்ந்து சிறிய அளவு தண்ணீர் சேர்த்து வதக்க வேண்டும் கருக விடாமல் நன்றாக வதங்கியவுடன் சிறிய கீற்றாக நறுக்கி வைத்த இரண்டு தக்காளியை போட்டு வதக்க வேண்டும்........

இப்போது கழுகி வைத்தி மத்தி மீனை சேர்த்து அதில் ஏற்கனவே நீரில் போட்டு வைத்த கொடம்புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்ந்து மன்சட்டியை மூடி வைத்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். இப்போது மூடியை திறந்து உப்பு பார்த்து அடுத்த பத்து நிமிடம் அடுப்பை அரை அளவில் வைத்து கொதிக்க விட வேண்டும்..........

கருவேப்பிலை தேங்காய் எண்ணைய் சேர்த்து இறக்கு விட வேண்டும்..........

புளி மசாலா இறங்க ஒரு அரைமணிநேரம் வைத்துவிட்டு சுடு சோறுடன் சாப்பிடலாம்......

வளக்கமான வேணாட்டு சமையலில் சேர்க்கும் தேங்காய் இல்லாத இந்த மத்தி மீன்கறி மிக சுவையானதாக இருக்கும்..........

Courtesy: குமரிக் கிழவனார்

     |