For Advertising... Please Contact - 9940542560

அட்வென்சர் என்று வனப்பகுதிகளை சீரழித்து வருகின்றனர்...

Western Ghats Region - Kanyakumari  |        |   

மேற்குதொடர்ச்சி மலைகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும் காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தின் செழிப்பிற்கு மலைகள் தான் முக்கிய காரணம் அதன் முக்கியத்துவம் தெரியாமல் பாதுகாக்கபட்ட இடங்களை மனிதன் ஆக்கிரமித்து கொள்ளும் போது தான் இயற்கை பாதிப்படைக்கிறது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் 3000 அடிக்கு மேல் உள்ள வேளிமலை உச்சி பகுதிக்கு தக்கலை மருந்துகோட்டை வழியாக செல்லுபவர்கள் பிளாஸ்டிக்கவர்கள், பிளாஸ்டிக்பாட்டில்கள், குவாட்டர்பாட்டில்கள் போன்றவைகளை மேல் உச்சியில் வீசிவிட்டு வருகின்றனர். இதனால் அங்கு மக்கள் செல்ல கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சிமலையில் இயற்கை சூழல் மனித இடையூறுகளால் மிகவும் பாதிப்படைந்து வருகிறது தமிழகத்தில் 95% தண்ணீர் தேவையை அனைத்து மாவட்டங்களுக்கும் பூர்த்தி செய்வது மேற்கு தொடர்ச்சி மலைகள் தான் அவற்றின் இயற்கை சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் அதன் பூர்வகுடி விலங்குகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்... 

Courtesy: TN 75 memes

Courtesy: TN 75 memes

     |