For Advertising... Please Contact - 9940542560

மூங்கில் புட்டு - Bamboo Puttu

Kanyakumari Famous Foods  |        |   


புட்டு வேக வைக்க மூங்கில் குழாய்,
குழாயில் மாவு போடும் போது சிந்தாமல் இருக்க தேங்காய் சிரட்டையை உடைத்து ஒரு பகுதியை வைத்து தடுப்பான், தண்ணீர் கொதிக்க வைக்க
பிரத்யேக குடம்,
வெப்பத்தில் குழாய் வெடிக்காமல் இருக்க
தேங்காய் நார் கயிற்றால்
பாதுகாப்பு,
வெறும் அரிசிமாவு எனில் ருசிக்காது என்பதால்
இடை இடையே தேங்காய் துருவல் என அந்த கால புட்டு தயாரிக்கும் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.

அத்துடன் ருசியை அதிகரிக்க பப்படம், பயறு, சர்க்கரை , பழம் (or) கடலைக் கறி , மீன் கறி , சிக்கன் கறி என சைட் டிஷ்கள் சேர்க்கச் சொன்னவனும் ரசனை மிகு ருசியாளன்.

ஆவியில் வேகும் இட்லி, இடியாப்பத்தை விட நம்பள்கு ரொம்பப் புடிச்சது
புட்டு தானுங்கோ!!

குமரி மேற்கு மாவட்டத்தில் மத்திய தர ஹோட்டல்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரை விறுவிறு புட்டு வியாபாரம் நடக்கும்.
மண் வேலை, கட்டிட வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் புட்டு, பயறு, பப்படம், பழம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு, டீயும் குடித்து வேலைக்குச் செல்வர். புட்டு மெதுவாகவே செரிக்கும் என்பதால் 3 - 4 மணி நேரம் அவர்களுக்குப் பசியும் எடுக்காது.


Courtesy: திருவட்டாறு சிந்துகுமார்

     |