For Advertising... Please Contact - 9940542560

ரசவடை - கன்னியாகுமரி ஸ்பெஷல்

   7  |   

ரசவடை எனும் தேவாமிர்தம்..!!


உறுகாய்க்கு பொறவு சும்மா பேர கேட்ட ஒடனே நமக்கு நாக்குல எச்சி ஊறும் சாப்பாடு ஐட்டம் ரசவடைதான். குமரியான் வாழ்வியலில் நீங்காம இடம்பிடிச்சிருக்கும் ஒரு எளிமையான ருசியான காப்பி கடை உணவு......

பருப்புவடையை சுடு இரசத்தில் இட்டு அது கொவுர கொவுர ஒரு குழி சாஸர்ல ரசம் மணக்க மணக்க ஒரு ஸ்பூனுயும் போட்டு நம்ம டேபிளுக்கு வரும் ரசவடையின் மணமும் ருசியும் அருமையோ அருமை..........

சின்னபுள்ளயா இருக்கும்போது அப்பாரு ஊர்ல இருந்தா எப்பவாச்சும் அவருகூட திங்கள்சந்தைக்கு போவோம். காலையோ உச்சையோ இராத்திரியோ எப்ப போனாலும் அவருக்கு ஒரு சாய குடிச்சேயாவனும் எனக்கு அவரு சாய குடிச்சியாரோ இல்லயோ ஆனா சாய கடைக்கு போயே ஆவனும் அப்பதான் நமக்கு ரசவட நிச்சயம். இப்படித்தான் ரசவடை நம்ம வாழ்க்கைல வந்திச்சி...........

பள்ளியடத்துல படிச்சிட்டிருந்தப்போ ராமன்புதூர்ல ஒரு காபிக்கடை உண்டு இன்னைக்கும் இருக்கும்னு நினைக்கேன். பக்கத்துல எத்தன கட வந்தாலும் இன்னைக்கும் அதுக்கு சைசு எட்டுக்கு எட்டுதான் அங்க அன்னைக்கி காலத்துல ரசவடை ஒன் ஆப் தி பேமஸ் ஐட்டம்.......

கல்லூரி காலத்தில முழுநேரமா குளத்து பஸ்ஸ்டான்டு தான் தாவாரம் இல்லனா நாகராஜா கோவிலு தேர்மூடு அப்ப கட்டபொம்மன ஜங்சன்ல ஒரு கடைல ரசவடை அருமையா இருக்கும் சாய மணக்க மணக்க கொடுப்பாரு அந்த பெரியவரு.....

படிச்சு முடிச்சிட்டு தறி கெட்டு திரிஞ்சநேரத்துல நம்ம செம்மாங்குளக்கரைல ஒரு பார் இருந்திச்சு ஒரு ரசவட எட்டு ரூவா ஒரு ரசவடைக்கு இரண்டு கட்டிங் அடிக்கலாம் மூணு பேரா போனோம்னா ரசவடை வாங்கி அந்த ரசவடை தட்ட கொடுக்காம அடுக்கி வச்சிருப்போம் கணக்கு பாக்க வசதியா...............

மிகசமீபத்தில் சந்தைல தம்பி ஒருத்தனை சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் ரசவடை சாப்ட போவோம்னு கல்லுகுட்டத்துல ஒரு சாய்ப்பு எறக்குன அக்கா கடைக்கு கூட்டிட்டு போனான்.கொஞ்ச காலத்துல கடைசியா சாப்ட்ட தேவாமிர்தம் அதுதான்.........

நாரோயில்ல அந்த காலத்துலயே காஸ்ட்லியான ரசவட கடையெல்லாம் இருந்திச்சி ஆனா என்ன கடதான் மணக்குமே தவிர ரசமும் மணக்காது வடயும் மணக்காது..........

நான் பொழப்புக்காக குடியேறுன ஊருல சுத்த சைவ ஓட்டல்லதான் ரசவட கிடச்சும் நம்ம ஊரு காயி நூறு கொடுத்தாதான் ஒரு வட அதுவும் என்னத்தயோ போல இருக்கும்.......

நான் சாப்ட்டதுல்லயே அதி சுவை மிக்க ரசவடனா திக்கனங்கோட்டு பக்கத்துல
ஒரு பாட்டியும் தாத்தாவும் நடத்துன ஒரு கடதான் பதிமூனு வருசம் முன்னாடி நானும் என் முதலாளியும் அதுக்குன்னே காலத்தயே போவோம் இன்னைக்கு அந்த கட இருக்கானு தெரியல..........

இந்த ருசி எல்லாத்தயும் விட்டு சமூக நீதி பார்வைல பாத்தா ரசவட ஒரு சமத்துவ உணவு. காலைக்கும் உச்சைக்கும் இராத்திரிக்கும் செட் ஆவுற உணவு தனியாவும் சாப்பிடலாம் சோறு இட்லி தோசை இப்டி மற்ற உணவுகளுக்கூட கலப்பு பன்னியும் தின்னலாம். இதுல ரகசியம் என்னான வடை இன்று போட்டதா நேத்து போட்டதா இல்லனா ஒரு வாரத்துக்கு முன்னாடி போட்டதான கடகாரனுக்கு மட்டும் தான் தெரியும்..........

ரசவடை எனும் தேவாமிர்தம் போற்றுவோம்.......

நன்றி...

குமரிகிழவனார்

   7  |