For Advertising... Please Contact - 9940542560

உளுந்தஞ்சோறு - Ulundu Choru

Kanyakumari Famous Foods  |      3  |   

உளுந்தஞ்சோறும் அதன் கூட்டான்களும்..!!

குமரி மாவட்ட மக்களின் உணவு முறைகளில் அதி முக்கியமான உணவு வகை உழுந்தஞ்சோறு.....


சங்க காலம் தொட்டு தமிழர் உணவுகளில் தமிழர் விழாக்களிலும் முக்கிய பங்கு வகித்த உணவுமுறை இன்று பிரியாணிகள் நெச்சோறுகளின் வரவுகளால் வளக்கொழிந்தே போய் விட்டது.........

ஆனால் இன்றும் குமரியான்களின் உணவுமுறைகளில் நீங்காது இடம் பிடித்தருக்கும் உழுந்தஞ்சோறு நமது மனதுக்கு என்றென்றைக்கும் நெருக்கமான உணவு.......

வறுத்த உழுந்தும் உருண்டை அரிசியும் சுக்கும் வெளுத்துள்ளியும் உப்பும் கறிவேப்பிலையும் வெந்தயமும் போட்டு மணக்க மணக்க இறக்கி வைத்த உழுந்தஞ்சோறு வீடு மொத்தமுக்குமாய் மணம் பரப்பி நிற்கும்.........

உழுந்தஞ்சோறுக்கு சரியான கூட்டாண் ஏது என்று விவாதமே வைக்கலாம் சுட்ட பப்படமும் இடிச்ச சம்பந்தியுமே தேவாமிர்தம் தான் உளுந்தஞ்சோறோடு கூட்ட......

உளுந்தஞ்சோற்றோடு முட்டை அவியல் தேங்காய்
இடித்த சம்பந்தி சுட்ட பப்படம் இஞ்சி தீயல் என்று அகமகிழ்ந்துவிடும் மக்களும் உண்டு......

சைவத்தில் உழுந்தஞ்சோறுக்கு அதிசுவை மிகு கூட்டான் துவையலும் குமரி தேங்காயெண்ணை மணக்கும் அவியலும் தான்..........

ஆனால் என்னை கேட்டால் உழுந்தஞ்சோற்றிர்க்கு அசைவ கூட்டாண்கள் தான் சிறந்தவை திங்கள் கிழமை சந்தையில் நல்ல பாறை மீன் முள்ளும் தலையும் வாங்கி மல்லி ஏத்தி வறுத்து அரச்சி கறி வச்சி தின்று பாருங்கள் இந்த சுவையோ சுவை...........

உளுந்தஞசோறும் மீன்கறியும் கூட்டனும் என்றால்
நல்ல செவப்பு மொளவு போட்ட கொடம்புளியும் சேத்து வத்த வச்ச நெம்மீன் சூரையும் உளுந்தஞ்சோறும் வேறு ரகம்........

ஞாயிற்று கிழமைகளில் உளுந்தஞ்சோறு வச்சா பீப் மசாலாதான் முதல் தேடல் ஆனால் நாட்டுக்கோழிகறியும் உழுந்தஞ்சோறும் அதைவிட உன்னதம்............

ஆட்டுகறிக்கு உளுந்தஞ்சோறு அந்த அளவு சுவைதாராது என்றாலும் கொத்தி போட்டு கறி வச்ச ஆட்டுத்தலையும் உளுந்தஞ்சோறும் நல்ல கூட்டான்.....

ஆக உளந்தஞ்சோறு உளுந்தஞ்சோறுதான் அதோடு ஊறுகாய் சேர்த்தாலும் சரி தலைக்கறி சேர்தாலும் சரி அதன் சுவையும் மணமும் மகிழ்விக்கும்...........

பிரியாணிகளில் வீழ்ந்து கிடக்கும் அற்ப மாணிடரே வாருங்கள் ஒரு முறை உளுந்தஞ்சோறும் பாறை மீன் முள்ளும் தலையும் அல்லது உளுந்தஞ்சோறும் ஆட்டின்தலையும் கூட்டி பாருங்கள் கண்டிப்பாக பிரியாணியை புறம் தள்ளுவீர்கள்..............


நன்றி


குமரிகிழவனார்

   3  |