
`அரேபியாவுக்கு போன தீக்கொளுத்தி ஆவரான்’னு ஒரு புத்தகத்தை நண்பர் பிரபு தர்மராஜ் ( Prabhu Dharmaraj ) முன்னுரைக்காக அனுப்பி வைத்திருந்தார். நான் முன்னுரை எழுதும் அளவுக்கு அப்பாடக்கர் இல்லை.. வேண்டுமானால் புத்தகம் படித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
வேலை பளுவுக்கு நடுவில்.. பெரிய ஆர்வம் இல்லாமல் தான் படிக்க ஆரம்பித்தேன்.
ஆனால் மனதிலிருந்து சொல்கிறேன்..
அந்த புத்தகம் படித்து முடிக்கும் வரை வாய்விட்டு என்னை மறந்து வாய்விட்டு சிரித்தபடியே இருந்தேன்.
இந்த பிரபு யார் என்றால் நமக்கெல்லாம் ஏற்கனவே `எலிசபெ’த் கதையின் மூலம் அறிமுகமானவர் தான்..
ஒவ்வொரு பாராவிலும் நகைச்சுவை குண்டுகளை அள்ளி விசுகிறார். ஒருவனை அழ வைப்பது மிக எளிது.. ஓங்கி ஒரு அறை விட்டால் போதும்.. ஆனால் ஒருவனை சிரிக்க வைப்பது மிக கடினம். .
பிரபுவுக்கு சிரிக்க வைக்கும் எழுத்து நடை பிரமாதமாக கை வருகிறது. இந்த ஆவரான் கதையை துணிந்து திரைப்படமாக எடுக்கலாம்.. அரங்கம் சிரிப்பு மழையால் நிரம்பும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்..
அந்த புத்தகத்தில் `வல்சம்மா’ என்றொரு முக்கியமான கதாப்பாத்திரம் வருகிறது..
செம கேரக்ட்டர் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிவைக்கிறேன்.
மற்றதையெல்லாம் நண்பர்கள் புத்தகம் வெளியானதும் படித்துவிட்டு வாய்விட்டு சிரிக்கவும்.. :)
-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா


Posted by
Thank You So Much....
7 years ago Reply