For Advertising... Please Contact - 9940542560

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய பள்ளி மாணவிகள்...

Nagercoil News  |        |   

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.. தற்போது கொரோனாவுக்கு பயந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். என்ன தான் டிவி பார்த்து விளையாடி பொழுதை போக்கினாலும் அதிலிலும் மன நிறைவு இல்லை என்பதால் சில பயனுள்ள நடவடிக்கையை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தை அடுத்து உள்ள அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த பேராசிரியர் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தில் அவரது மூத்த மகள் பவித்ரா (8-ம் வகுப்பு) வைஷ்ணவி (6-ம் வகுப்பு), அவரது தம்பி மகள் தன்ஷிகா (6-ம் வகுப்பு), தம்பி ஸ்ரீனிவாசன் (5-ம் வகுப்பு) படிக்கும் மாணவ, மாணவியர்கள் கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக்க விரும்பி கைவினை பொருட்கள் உருவாக்கியும், ஓவியங்கள் வரைந்தும் அப்பகுதியில் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். இவர்கள் வீட்டில் உள்ள கழிவு பொருட்கள், தீக்குச்சி, மரக்கிளைகள், காகிதங்கள் கொண்டு ஈபில் டவர், மரக்கிளையில் குருவி கூடு மற்றும் நவதானியங்களை கொண்டு விலங்குகள், பல வண்ண ஓவியங்களும் வரைந்தும், செடிகள் வளர்த்தும் ஊரடங்கு விடுமுறையை பயன் உள்ளதாக ஆக்கியுள்ளனர். தங்களை போல் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் சமயங்களில் இது போன்ற பயனுள்ள நடவடிக்கையை மேற்கொள்வதால் அவரவர் வீடுகள் அழகாக தெரிவதுடன், சுற்றுப்புறமும் தூய்மை ஆகி பொலிவு பெரும் அறிவும் வளர்சி அடையும் என சக மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்....



     |