For Advertising... Please Contact - 9940542560

Karuppati Tea Kadai - Chettikulam Junction Nagercoil

     |   

காபி With மழை..!!

Picture Credits: Jawahar Clicks
நல்ல மழை கொட்டோ கொட்டுன்னு வெளியில கொட்டுகிற போது நான் இதை எழுதிக் கொண்டுருந்தேன்.

சூடான கருப்பட்டி காப்பியும் தயிர் வடையும் தான் இன்னைக்கு என்னோட காம்பினேஷன்.

கடையின் முன்னே சுமேட்டோ டெலிவர் பையன்கள் காவல் இருக்கிறார்கள் இங்கே பிளேஷ்மென்ட்டான ஆர்டர்களை வாங்குவதற்காக.

ஒரு சாதாரண காபி கடையில் ஆன்லைன் பிசினஸா என ஆச்சரியப்பட்டேன்.

ஜெர்வின் /ஜெனீஸ் சகோதர்கள்தான் இந்த 'கருப்பட்டி காபி' ஷாப்பின் வெற்றிக்கு மூளையாக இருக்கின்றனர்.

இருவருமே இன்ஜினியரிங் கிராஷுவட்ஸ். படித்த வேலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றால் ?
மூத்தவர் ஜெர்வின் mba படிப்பின் அதீத நுட்பம் தான் இது.

அவர்களது செந்த கட்டிடம் எனவே மேல் மாடியில் கட்டிடம் கட்டுமான பிளனர்ஸ் தொழில் செய்கின்றனர். நவின கட்டிட டிசைன் மற்றும் கட்டுமானம் என தூள் பறந்த பிசி. இதன் தரைதளத்தில் இந்த காபி ஷாப் இருக்கிறது.

தமிழ் நாட்டில் எங்களது கருப்பட்டி காபி ஷாப்பை தான் முதல் ஆன்லைன் பிசினஸ் லிங் பண்ணினோம். நாங்கள் எல்லா வகையான டீ காபிகளும் தயார் செய்கிறோம். எங்களின் ஸ்பெஷல் கருப்பட்டி காபி ஆகும்.

மேக்சிமம் ஆன்லைன் பிசினஸ்சில் சுமோட்டோ மற்றும் சுக்கியில் ஆர்டர் வருவது எங்களின் கருப்பட்டி காபிக்கும் தயிர் வடைக்குமே.

எந்த வேலைக்கும் வெட்கம் பார்க்ககூடாது, நேர்மையோடும் கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்கிறார்கள்.

தொழிலில் நமது நேர்பட கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும்.முக்கியமா வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சுவைப்படவும்,சூடாக இருந்தால் சக்கைபோடு போடலாம் என்கிறார்கள் இருவரும்.

எனக்கான வேலை கிடைக்கவில்லை,நான்படித்த படிப்பிற்கும் இதற்கு சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிக் கொண்டு ஏதோ ஒரு விதத்தில் தேங்கி நிற்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றேன்?

அந்த காலம் மாதிரியில்லை இன்று விரல் நுனியில் இருக்கிறது உலகம் நமக்கான ஆயிரம் வேலைகள் இங்கே கொட்டிக்கிடக்கிறது, நல்லதை தேர்ந்தெடுத்து நவீன நுட்பம் சேர்ந்த அறிவோடு நாம் ஒரு தொழிலை செய்தால் எளிதில் வெற்றிபெறலாம் என்கின்றனர்.

பெரிய யானையை பிடிக்க முயற்சி செய்தால் அட்லீஸ்ட் நாம் ஒரு பூனையாவது பிடித்துவிடலாம் என கண்சிமிட்டுகிறார்கள்.

நாகர்கோவில் செட்டிக்குளம் சற்குணவீதில் இருக்கிறது இந்த 'கருப்பட்டி காபி கடை' நீங்களும் ஒரு நடைபோய் சூட ஒரு காபியும் தயிர்வடையும் சாப்பிட்டு பாருங்களேன்.

காபியோடு மழையை கொண்டாடுவோம்.

Courtesy: Jawahar Clicks

     |