For Advertising... Please Contact - 9940542560

வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று...

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த தற்காலிக சந்தையில் 8 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் மேற்பார்வையில் பேருந்து நிலையத்தின் 3 வாயில்களும் அடைக்கப்பட்டு சந்தையில் பணியாற்றிய வியாபாரிகள், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகிய அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது......

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது....

மேலும் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிய சந்தை மூடப்பட்டது......

பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.....

தற்காலிக சந்தையில் கடந்த 10 தினங்களுக்குள் பொருட்கள் வாங்கவோ அல்லது வேலைக்காக வந்த நபர்கள் தாமாகவே முன்வந்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.....

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Pic Courtesy: Jackson Herby

Courtesy: நாகர்கோவில் மாநகராட்சி

     |