For Advertising... Please Contact - 9940542560

பள்ளிகளின் 'ஆப்' மூலமாக பாடம் நடத்துவது...

Nagercoil News  |        |   


வீட்டில் குழந்தைகளை செல்போனின் முன் நாள் முழக்க அமரவைத்து பள்ளிகளின் 'ஆப்' மூலமாக பாடம் நடத்துவது கெடுமையிலும் கொடுமை.அதனை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.

பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் நேரிடையாக பாடம் கற்கும் அனுபவம் எவ்வளவு சிறந்தது. எத்தனை நண்பர்களோடு அவர்கள் நேரிடையாக பழகவும்,சண்டையிடுதலும்,அன்பொழுக கட்டிப்பிடிக்கிறதும் என பள்ளிவளாகம் அவர்களுக்கு வாய்த்திருந்தது.

மெய்நிகர் உலகின் ஆசிரியர்கள் போலியானவர்களே...

கொராணா காலத்தில் நம் குழந்தைகள் பள்ளி பாடங்களை படிக்கவில்லை என்றால் துறுபிடித்து ஒன்றும் போகமாட்டார்கள்.

அன்றாடம் நம்மோடு அவர்களை இயங்க விடுவோம்,நமக்கு தெரிந்த சமையலை அவர்களுக்கு புரிகிறபடி கற்றுக்கொள்ளட்டும். வீட்டினை சுத்தமாக வைக்க கற்று கொடுப்போம்.தோட்டங்களில் அவர்களை சேடிகளோடு உறவாடவிடுவோம்.அங்கு வரும் பறவையினங்களிடம் அவர்கள் உரையாடட்டும். பூக்களை நுகர சொல்லிக் கொடுப்போம் அவற்றை தொடுக்கவும் கற்றுக் கொடுப்போம்.

கொராணா காலத்தில் கனிதரும் மரம் ஒன்றை அவர்களின் கைகளால் நட்டு வளர்த்தெடுக்க பயிற்சியளிப்போம். அது அவர்களை மனதளவில் ஆக்க பூர்வமான தளத்தில் இன்னும் உற்சாகப்படுத்தும்.

மனித குழந்தைகள் அவர்கள்,சர்க்கஸ் மிருகங்கள் அல்ல அவர்கள்.

அவர்கள் போக்கில் இயல்பாக கற்றுக்கொள்ளும் திறனறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.

Courtesy: ஜவஹர்.ஜி

     |